நாளை முதல் நிறங்களின் அடிப்படையில் அத்தியாவசிய சேவை ஸ்டிக்கர்

Date:

பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் கொழும்பு நகரத்திற்குள் நுழையும் அத்தியாவசிய சேவை வாகனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் முறையை திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பிற்குள் நுழையும் அனைத்து சாலைகளிலும் புதிய ஸ்டிக்கர் அமைப்பு நாளை காலை முதல் பயன்படுத்தப்படவுள்ளது. 11 நிறங்களில் துறைரீதியாக ஸ்டிக்கர் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை இந்த ஸ்டிக்கர் செல்லுபடியாகும், என பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன கூறினார்.

அதன்படி 11 துறைகளுக்கு வெவ்வேறு வண்ணங்களின் கீழ் ஸ்டிக்கர்கள் வழங்கப்படும்.

சுகாதார சேவைகள் – பச்சை
முப்படையினர் / பொலிஸ் – நீலம்
அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் – சிவப்பு
அத்தியாவசிய சேவை விநியோகஸ்தர்கள் – மஞ்சள்
இறக்குமதி / ஏற்றுமதி – பிறவுண்
உணவு விநியோகம் – சாம்பல்
அத்தியாவசிய தனியார் துறை – ஊதா
மீடியா – ஒரேஞ்ச்
விமான பயணம் – வெள்ளை
அவசரநிலை (மருத்துவ தேவை, இறுதிச்சடங்கு) – கருப்பு

சமைத்த உணவு மற்றும் விநியோக சேவைகளிற்கு – சாம்பல்

கொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு இந்த ஸ்டிக்கர்கள் நாளை வழங்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

நிந்தவூரில் நாளை முதல் கோழி இறைச்சி விலையைக் காட்சிப்படுத்துவது கட்டாயம்-மீறினால் சட்ட நடவடிக்கை

நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சியின்...

அந்தமான் கடற்பகுதியில் வளிமண்டலத் தாழ்வுநிலை உருவாகும் சாத்தியம்! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தெற்கு அந்தமான் கடற்பகுதியில், வடக்கு சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் இன்று முதல்...

குற்றத்தை ஏற்றுக்கொண்ட ஜோன்ஸ்டன்

பதிவு செய்யப்படாத மற்றும் போலியான இலக்கத் தகடுகளைக் கொண்ட பிஎம்டபிள்யூ (BMW)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்