ஓடிடியில் வெளியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் படம்!

Date:

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் லக் சகி’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் குட் லக் சகி என்ற படத்தில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் சகி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் அனைவராலும் துரதிருஷ்டம் நிறைந்ததாகப் பார்க்கப்படுகிறது. பின்னர் துப்பாக்கி சூடு வீராங்கனையாக மாறி தன் மீதான பிம்பத்தை எப்படி மாற்றுகிறார் என்பதே படத்தின் கதை.

இந்தப் படத்தில் நடிகர் ஆதி மற்றும் ஜெகபதி பாபு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் ஜூன் 3 ஆம் திகதி தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் முடங்கியுள்ளதால் படக்குழுவினர் ஓடிடி முடிவைக் கையில் எடுத்துள்ளதாகத் தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ZEE5 நிறுவனம் இந்தப் படத்தை வாங்கிவிட்டதாகவும் விரைவில் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் மிரட்டிய சீன ரௌடி கைது!

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில் முதலீடு செய்ய வருபவர்களை அச்சுறுத்தி பணம்...

மஹிந்தவின் சகாவிற்கு வரும் விசித்திர நோய்: நீதிமன்றில் நடந்த சுவாரஸ்யம்!

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லகமவின் பிணை மனுவை நேற்று (13) நிராகரித்த...

அம்மாவும் அப்பாவும் படுக்கையில்: பிணை கோரும் நாமல்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பில் ரூ. 100 மில்லியன் இலஞ்சம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்