பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி இறக்குமதி; பிரேசில் அரசு ஒப்புதல்!

Date:

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை பிரேசிலில் இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டின் தேசிய சுகாதார ஒழுங்குமுறை அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதற்கிடையே தடுப்பூசிகளை தயாரித்து வெளிநாடுகளில் இறக்குமதி செய்யும் பணிகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தை தலைமையிடமாக வைத்து இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டிடம் ஏற்கனவே அனுமதி கோரப்பட்டிருந்தது.

இருப்பினும், அப்போது சில காரணங்களை கூறி பிரேசில் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் தேசிய சுகாதார ஒழுங்கு முறை அமைப்பான அன்விசா அந்த கோரிக்கையை நிராகரித்தது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசிகளை பிரேசிலில் இறக்குமதி செய்வதற்கு அன்விசா அமைப்பு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.

கோவாக்சின் இறக்குமதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால் முதற்கட்டமாக 40 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் பிரேசிலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

spot_imgspot_img

More like this
Related

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...

மட்டக்களப்பில் மனைவியின் சகோதரியை 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தானுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமி...

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்