இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொறடறாளர்களின் எண்ணிக்கை 200,000 ஐ கடந்துள்ளது. இந்த எண்ணிக்கையை கடக்கும் 78வது நாடாக இலங்கை பதிவாகியது.
இலங்கையில் முதல் கொரோனா வைரஸ் தொற்றாளர் 2020 ஜனவரியில் அடையாளம் காணப்பட்டார்.
இலங்கையில் தற்போது COVID-19 மூன்றாவது அலை பரவி வருகிறது. தற்போது அடையாளம் காணப்படும் தொற்றாளர்கள் புத்தாண்டு கொரோனா வைரஸ் கொத்தணியுடன் இணைக்கப்படுகிறார்கள்.
இன்று நாட்டில் மேலும் 2,280 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 201,534 ஆக உயர்ந்துள்ளது.
இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டவர்கள் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் 33,746 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று 1,851 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் மருத்துவமனைகளில் எண்ணிக்கை 166,132 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று சந்தேகத்தில் 1,377 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.