இன்று யாழ் குடாநாட்டில் மழையுடன் கூடிய காலநிலை நிலவு வரும் நிலையில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியில் உள்ள வல்லை பாலத்தில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த கப் ரக வாகனம், பாலத்தில் வழுக்கி, கட்டுப்பாட்டை இழந்து கடல் நீரேரிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நெடுங்கேணி பகுதியில் இருந்து பருத்தித்துறைக்கு வெங்காயம் ஏற்றுவதற்கு வந்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதியான ஒலுமடு நெடுங்கேணி பகுதியினை சேர்ந்த செல்வசந்தின் ரகுநேசன் காயமடைந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1