மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை அவர்களது மகள் மற்றும் மகன் ஆகியோர் இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.
இன்று காலை மகளின் சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில், மதியத்தின் பின்னர் ஏனைய 3 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன.
உமேஷா மதுவந்தி (23), விஜெரத்ன (57), லலிதா வீரசிங்க (56), ஷானக புஷ்பா குமாரா (29) ஆகியோரே உயிரிழந்தனர்.
அவர்களின் உடல்கள் மாவனெல்ல வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1