மதுரை அரசு கொரானா மருத்துவமனையில் மின்விசிறி கீழே விழுந்து பெண் நோயளி தலையில் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை நாடு முழுவதும் கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென் தமிழகத்தில் அதிநவீன வசதிகளோடு பல்நோக்கு மருத்துவமனையாக செயல்படும் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் மதுரை மட்டுமில்லாது தென்மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1400க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கை வசதி நான்கு தளங்களாக மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் கடந்த 30ம் தேதி முதல் மதுரை பேரையூர் மள்ளப்புரம் கிராமத்தை சேர்ந்த வந்த பாண்டியம்மாள் என்ற மூதாட்டி கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு, நுரையீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் இன்று திகாலை அவர் படுக்கைக்கு இருந்த மின்விசிறி திடீரென பழுதாகி படுக்கையில் அமர்ந்திருந்த பாண்டியம்மாள் தலையில் விழுந்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
நல்வாய்ப்பாக எந்தவித அசாம்பாவிதமும் நடைபெறாமல் தலையில் காயம் ஏற்பட்ட மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. புதிதாக கட்டப்பட்டு பல்நோக்கு அரசு மருத்துவமனையில் மின்விசிறி நோயாளியின் தலையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அரசு கொரோனா மருத்துவமனையில் உள்ள மின்சாதன பொருட்களை கண்காணித்து கோளாறுகள் இருந்தால் சரி செய்ய நோயளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




