ஜம்மு-காஷ்மீரில் ஹ்தீ பேகம் என்ற 124 வயது மூதாட்டி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார்.
இந்தியாவில் சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்குப்பின் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி பணி செலுத்தப்பட்டது. அந்த நேரத்தில் பெரும்பாலானோர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநில அரசுகளும் சிறப்பு முகாம் நடத்தி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஜம்மு- காஷ்மீரில் 124 வயது மூதாட்டி இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார். ஜம்மு- காஷ்மீர் பாரமுல்லாவில் உள்ள ஷ்ரக்வாரா பிளாக் வகூரா என்ற இடத்தில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது ரெஹ்தீ பேகம் என்ற 124 வயது மூதாட்டி தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இந்தத் தகவலை தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.