திருமண நிகழ்வில் துப்பாக்கி வைத்து வானில் சுட்ட மணப்பெண்! (வீடியோ)

Date:

உ.பி மாநிலத்தில் திருமணத்தின் போது மணப்பெண் மேடை ஏறும் போது துப்பாக்கியை வைத்து வான் நோக்கி சுட்ட வீடியோ வைரலாக பரவியது. மணப்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீப காலமாக திருமணங்களில் வித்தியாசமாக எதையாவது செய்வது பேஷன் ஆகிவிட்டது. தன் திருமணத்தை மறக்க முடியாத தருணமாக மாற்ற வேண்டும் என்ற ஆர்வம் இவர்களை இவ்வாறு செய்ய தூண்டுகிறது. இப்படியாக சிலர் வித்தியாசமாக செய்கிறேன் பேர் வழி என்று சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். அப்படியாக சமீபத்தில் நடந்த திருமணத்தில் மணமகள் செய்த காரியத்தால் அவர் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்.

உ.பி., மாநிலம் பிரதாப்கார்க் அருகே உள்ள லஷ்மண் கார் பூர்வா என்ற கிராமத்தில் சமீபத்தில் ஒரு திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் திருமண மேடைக்கு செல்லும் முன்பு மணமகள் ரூபா பாண்டே என்பவர் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுவிட்டு பின்னர் மண மேடைக்கு ஏறினார். இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஆர்பரித்தனர்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. இது போலீசாரின் கவனத்திற்கு சென்றது. போலீசார் இது குறித்து விசாரித்ததில், அந்த கிராமத்தில் கிரிஜா சங்கர் பாண்டே என்பவருக்கும் ரூபா பாண்டே என்பவருக்கும் நடந்த திருமணத்தில் தான் இந்த சம்பவம் நடந்ததாகவும், மணப்பெண் பயன்படுத்தியது அவரது மாமா பெயரில் உள்ள லைசென்ஸ் துப்பாக்கி தான் எனவும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரூபா பாண்டே லைசென்ஸ் இல்லாமல் தேவையில்லாத இடத்தில் துப்பாக்கியை பயன்படுத்தியதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

திருமணங்களில் வித்தியாசமாக ஏதாவது செய்கிறேன் பேர் வழி என்று பல நேரங்களில் சட்ட விதிமுறை மீறல்கள் நடக்கிறது. இந்த கலாச்சாரம் மாற வேண்டும் என்றால் அதன் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்