ஏரியில் தொலைந்து போன நிச்சயதார்த்த மோதிரம் திரும்ப கிடைத்த அதிசயம்!

Date:

இங்கிலாந்தி இந்திய வம்சாவளி தம்பதியினர் தொலைத்த திருமண நிச்சயதார்த்த மோதிரம் ஏரியில் தண்ணீருக்குள் விழுந்து மீண்டும் திரும்ப கிடைத்த அதிசயம் சமீபத்தில் நடந்துள்ளது. அது குறித்து விரிவாக காணலாம் வாருங்கள்.

இந்தியாவை சேர்ந்தவர் விக்கி படேல், இவர் லண்டனில் வசித்து வருகிறார். இவரும் லண்டனில் வசிக்கும் மற்றொரு இந்தியா வம்சாவளி பெண்ணான ரெபெக்கா செளக்ரியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் நிச்சியிக்கப்பட்டு திருமணத்திற்காக காத்துக்கொண்டிருந்தனர். இதற்கிடையில் திருமணத்திற்கு முன்பு இருவரும் ஜோடியாக புகைப்படம் எடுக்க இருவரும் முடிவு செய்தனர்.

அதற்காக பல முறை திட்டமிட்டும் கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட கட்டுப்பாடுகளால் பயணிக்க முடியாமல் இருந்தனர். இறுதியாக கடந்த மே 24 இருவரும் அவர்கள் முதன் முதலில் சந்தித்துக்கொண்ட இடத்திற்கு சென்று அங்கு விக்கி படேல் தன் காதலை சொல்லும் படியான புகைப்படங்களை எடுக்க திட்டமிட்டனர்

திட்டமிட்ட படி அவர்கள் இங்கிலாந்தின் மிகப்பெரிய இயற்கை ஏரி அருகே சென்று போட்டோஷூட் செய்தனர் அப்பொழுது யாரும் எதிர்பாராத விதத்தில் அவர்களது திருமண நிச்சயதார்த்த மோதிரம் ரெபெக்காவின் விரல் இருந்து தவறி தண்ணீரில் விழுந்தது. இதனால் பதறி போன இருவரும் அதை எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் தண்ணீர் மிகவும் குளிராக இருந்துள்ளது. போட்டோ கிராபரின் ட்ரைபாடை கொண்டு எடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதுவும் விபரீதமாகி போக, மோதிரம் தண்ணீரின் அடிபாகத்திலிருந்த சகதிக்குள் சென்றது. இதனால் செய்வது அறியாது அந்த தம்பதி தவித்து சிலரிடம் உதவி கேட்டுள்ளார்.

இந்த தகவல் அப்பகுதியை சேர்ந்த அங்குஸ் ஹாஸ்கிங் என்பவரது காதிற்கு சென்றுள்ளது அவர் அந்த ஏரியை தன்னார்வரர்களை கொண்டு சுத்தப்படுத்துவது உள்ளிட்ட வேலைகளை செய்துள்ளார். அவர் தண்ணீருக்கு டைவ் அடித்து அடி வரை செல்லும் பயற்சி பெற்றவர் அவர் இந்த தம்பதிக்கு உதவி செய் நினைத்து வைட அடித்து மோதிரம் தொலைந்துபோன இடத்தில் தேடியுள்ளார். சுமார் 20 நிமிட தேடுதலுக்கு பிறகு அவர்கள் தொலைத்த மோதிரம் கிடைத்துள்ளது.

பின்னர் அவர் அந்த மோதிரத்தை தம்பதியிடம் ஒப்படைத்துள்ளார். இதனால் அவர்கள் பெரும் மகிழ்ச்சிடைந்துள்ளனர். இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. அனைடவரும் ஹாஸ்கிங்கை பாராட்டினர். நீங்களும் அவரை பாராட்ட விருப்பினால் நேடியாக எங்களது கமென்ட் செக்ஷனிற்கு செல்லவும்.

spot_imgspot_img

More like this
Related

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...

அனுபவமற்ற ஆட்சியால் நாடு சீரழிந்தது; நாட்டை மீட்க SJB மட்டுமே முடியும் – ஹலீம்

அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்