யாழில் தடுப்பூசி முடிந்தது: அடுத்த கட்ட தடுப்பூசி கிடைத்த பின்னரே இனி செலுத்தப்படும்!

Date:

யாழ் மாவட்ட பொதுமக்களுக்கு வழங்க அரசாங்கத்தினால்  முதற்கட்டமாக வழங்கப்பட்ட 50ஆயிரம் தடுப்பூசிகள் இன்று மதியத்துடன் நிறைவடைந்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவடைந்ததாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்

அடுத்த கட்ட தடுப்பூசிகள் வார இறுதியில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஏற்கெனவே தடுப்பூசி வழங்க தயாராக இருந்த கிராம சேவகர் பிரிவுகளில் நாளைய தினம் தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது. அந்த பகுதி மக்களுக்கான தடுப்பூசிகள் இரண்டாம் கட்ட தடுப்பூசி வந்தவுடன் குறித்த நிகழ்ச்சி நிரலின் படி தடுப்பூசி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

எனவே பொதுமக்கள் இது தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை. அடுத்தகட்ட ஊசி கிடைத்தவுடன் அந்த நிகழ்ச்சி நிரலின் படி தொடர்ச்சியாக தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படும்.

நேற்று மாலையுடன் 32 ஆயிரம் தடுப்பூசிகள் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் மிகுதி தடுப்பூசியும் நிறைவடைந்துள்ளது. எனினும் இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பணியாளர்கள் மற்றும் 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என எதிர்பார்த்து இருந்த போதிலும் கூடுதலான மக்கள் ஆர்வம் காட்டி தடுப்பூசியை பெற்றதன் காரணமாக இன்று மதியத் துடன் தடுப்பூசி நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார் .

எதிர்வரும் திங்கட்கிழமை ஒரு மில்லியன் தடுப்பூசிகள் அரசினால் நாட்டிற்கு எடுத்து வரப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது

spot_imgspot_img

More like this
Related

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்