பாவாடையுடன் பாடசாலை வரும் ஆசிரியர்கள்: மாணவனிற்கு ஆதரவாக நூதன போராட்டம்!

Date:

ஸ்பெயினிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் சிலர் பாவாடை அணிந்தபடி பாடசாலைக்கு சென்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமேற்கு ஸ்பெயினின் வல்லாடோலிடில் உள்ள விர்ஜென் டி சாக்கெடன் ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்று வந்தவர் 15 வயதான மைக்கேல் கோமஸ். அவருக்குள் ஏற்பட்ட பாலின சிக்கல் நிலைமையையடுத்து, பெண் போல ஆடை அணிய ஆரம்பித்தார்.

பாடசாலைக்கு பாவடை அணிந்த சென்ற போது, அவர் பாடசாலையிலிருந்த வெளியேற்றப்பட்டார். அவர் பாடசாலைக்கு மீள வர முடியாதென தடை விதிக்கப்பட்டது.

முன்னதாக அவர் பாடசாலைக்குள் மோசமாக கிண்டல் செய்யப்பட்டார். அவரை பாடசாலையிலிருந்து வெளியேற்ற முன்னர், உளவியலாளர் ஒருவரிடம் சிகிச்சை பெறுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளார்.

எனினும், அந்த மாணவன் பாவாடை அணிந்தபடி பாடசாலைக்கு வந்த போது, பாடசாலையை விட்டு நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. ஆசிரியர்கள் பலர், மைக்கல் கோமஸிற்கு குரல் கொடுத்து வருகிறார்கள்.

மைக்கல் கோமஸ் கல்வி கற்ற பாடசாலையில் ஆசிரியர்கள் தற்போது வகுப்பறைக்கு பாவடையுடன் சென்று வருகிறார்கள். அவர்களின் நடவடிக்கைக்கு சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி புதைகுழி விவகாரம்: ராஜ் சோமதேவவின் விளக்கங்கள் குறித்து சுயாதீன ஆய்வு கோரும் அமெரிக்கத் தமிழர் அமைப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்துள்ள...

மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து நவம்பர் 10 திகதி வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்