விரைவில் மாதவிடாய் வரவைப்பதும் தாமதப்படுத்துவது எப்படி?

Date:

சூழ்நிலை காரணமாக பெண்கள் ஏதாவது ஒரு சமயத்தில் தனது மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாக அல்லது தாமதமாக வரவைக்க விரும்புவார்கள். அதற்கு காரணம் விஷேச பூஜைகள், பண்டிகைள், திருமணங்கள் போன்ற விசேஷங்கள் தான் காரணம்.

பூஜை உள்ளிட்ட சமயங்களின் போது மாதவிடாய் கால பெண்கள் அதற்கு தடை செய்யப்பட்டவர்களாக சமூகத்தில் கருதுகிறார்கள்.

அதுபோல கோவில் விழாக்கள், இல்ல நிகழ்ச்சிகள், திருமணங்கள், போன்றவற்றில் கலந்து கொள்வதற்காக, மாதவிடாயை சில நாட்கள் முன்னரோ அல்லது தாமதமாகவோ வரவைக்க பெண்கள் நினைப்பார்கள். அதனை இயற்கை உணவு முறை மூலமாக செய்யலாம்.

பொதுவாக, உடலில் உஷ்ணத்தை உருவாக்கும் உணவை உட்கொண்டால் மாதவிடாய் சுழற்சியை விரைவில் வரவழைக்க காரணமாக இருக்கும்.

பப்பாளி, அன்னாசி உள்ளிட்ட பழ வகைகளை உண்டால் விரைவாக வரவைக்க முடியும்.

ஏனெனில் பப்பாளி உடலில் அதிக வெப்பம் உருவாக்கி மாதவிடாயை விரைவில் வரவழைக்கும். அதோடு பப்பாளியில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளதால் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஆரோக்கியத்தை தரும்.

அன்னாசி பழமும் உடலில் அதிக அளவு உஷ்ணத்தை தூண்டி விரைவில் மாதவிடாய் வரவழைக்க உதவும்.

இதேபோல, ஓம விதைகளை நீரில் ஊறவைத்து மூன்று நாட்களுக்கு ஒரு டம்ளர் குடிப்பதன் மூலம் மாதவிடாயை சில நாட்கள் முன்னால் வரவழைக்க உதவும்.

மேலும், எள் விதையை வெல்லத்துடன் சேர்த்து, மாதவிடாய் தேதிக்கு 15 நாடகளுக்கு முன் சாப்பிட்டு வந்தாலும் விரைவில் மாதவிடாய் வரவழைக்க உதவும்.

மேற்கண்டவற்றிற்கு நேர் மாறாக செய்தால் மாதவிடாய் தாமதமாக வரவழைக்க முடியும்.

ஆம், உஷ்ணமான உணவு பொருட்கள் மாதவிடாயை முன்னரே வரவழைக்கும், அதற்கு நேர்மாறாக குளிர்ச்சி தரக்கூடிய உணவுகள் மூலம் மாதவிடாயை தாமதப்படுத்த முடியும்.

மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னர் இருந்தே, சிறிது வெந்தயத்தை எடுத்து, வாயில் இட்டு தண்ணீர் பருகி வர, விலக்கு தள்ளிப் போகும்.

அதேபோல மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே வெள்ளரிப் பிஞ்சுகளை உட் கொண்டு வரலாம், இதன் மூலம், உடல் உஷ்ணம் குறைந்து, மாதவிலக்கு தள்ளிப் போகும்.

பொட்டுக் கடலையை கூட காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில், நன்கு மென்று தின்று, தண்ணீர் பருகி வந்தால் மாதவிடாயை தள்ளிபோடலம்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...

நீர்கொழும்பு சிறைக்குள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: சிறைச்சாலை ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்