3 வீடுகளில் அடுத்தடுத்து தீ விபத்து : ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்!

Date:

கூரைவீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அருகில் இருந்த 3 வீடுகளுக்கு அடுத்தடுத்து பரவியதால் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த டி.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் என்பவரது கூரை வீடு மின்கசிவினால் தீப்பற்றியது.

காற்று வேகமாக வீசவே சக்திவேலின் கூரைவீட்டில் இருந்த தீ மளமளவென பரவி அருகில் இருந்த ஏழுமலை, வீரன் ஆகியோரின் வீடுகளுக்கும் பரவி எரிய தொடங்கியது.

தகவலறிந்த திருக்கோவிலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மேலும் அப்பகுதியில் தீபரவாமல் இருக்க தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஏழுமலை, சக்திவேல், வீரன் ஆகிய மூவரின் வீடுகளில் இருந்த தட்டுமுட்டு சாமான்கள், துணிமணிகள், நகை உணவு தாணியங்கள் என 5லட்ச ரூபாய் மதிப்பில் பொருட்கள் சேதமானது. சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் மிரட்டிய சீன ரௌடி கைது!

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில் முதலீடு செய்ய வருபவர்களை அச்சுறுத்தி பணம்...

மஹிந்தவின் சகாவிற்கு வரும் விசித்திர நோய்: நீதிமன்றில் நடந்த சுவாரஸ்யம்!

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லகமவின் பிணை மனுவை நேற்று (13) நிராகரித்த...

அம்மாவும் அப்பாவும் படுக்கையில்: பிணை கோரும் நாமல்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பில் ரூ. 100 மில்லியன் இலஞ்சம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்