இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின்போது வீரர்களுடன் குடும்பத்தினரும் உடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, கிட்டதட்ட நான்கு மாதங்கள்வரை அங்கு தங்கி கிரிக்கெட் விளையாடவுள்ளது. இதனால், வீரர்களுடன்அவர்களது குடும்பத்தினரையும் அனுமதிக்க வேண்டும் என பிசிசிஐக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு பிசிசிஐ தற்போது சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய பிசிசிஐ நிர்வாகி ஒருவர், “ஆம், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்திய வீரர்கள் தங்கள் குடும்பங்களை அவர்களுடன் கூட்டி செல்லலாம் என்ற ஒரு நல்ல செய்தி வெளிவந்துள்ளது. இந்த விதி மகளிர் அணியின் குடும்பத்தினரும் பொருந்தும். வீரர்களின் மனநிலை மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின்இறுதிப் போட்டியைக் காண கங்குலியும், ஜெய் ஷாவும் அங்கு செல்ல மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
“எனக்குத் தெரிந்தவரை, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு (கங்குலி மற்றும் ஜெய் ஷா) அனுமதி வழங்கவில்லை. பொதுவாக, நிர்வாகிகள் டெஸ்ட் போட்டிக்கு முன் செல்வார்கள், ஆனால் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளின்படி, அவர்கள் உறுப்பினர்களாக இல்லாததால், அவர்கள் 10 நாட்களுக்கு கடுமையான தனிமைப்படுத்தலுக்கு ஆளாக நேரிடும். இதன் காரணமாகத்தான் அனுமதி வழங்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.
இத்தொடர் முடிந்தப் பிறகு இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி துவங்கி அக்டோபர் 14ஆம் திகதி வரை நடைபெறும்.தற்போது இந்திய அணி வீரர்கள் மும்பையில் தனிமை முகாமல் இருக்கிறார்கள். ஜூன் 3ஆம் திகதி இங்கிலாந்து புறப்படவுள்ளனர்.