மிகப்பெரிய வாகனக் கடத்தல் கும்பலை பொலிசார் கண்டறிந்துள்ளனர். இரத்னபுராரியை மையமாக கொண்டு செயற்பட்ட இந்த கும்பல் சுமார் 30 வாகனங்களை திருடியதை பொலிசார் கண்டறிந்துள்ளனர்.
இரத்தினபுரியில் திடீரென வாகன திருட்டு அதிகரித்திருந்தது. நாளாந்தம் இரண்டு வாகனங்கள் திருடப்படும் புகார் கிடைத்து வந்தது.
இது தொடர்பில் பொலிசாரிடம் ஒருவர் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 13 முச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டன. ஐந்து சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டிகளை திருடி, வர்ணத்தை மாற்றி, இலக்கத்தகட்டை மாற்றி அவர்கள் விற்பனை செய்துள்ளனர்.
அடையாளம் மாற்றப்பட்ட 12 முச்சக்கர வண்டிகள், இரண்டு சிறிய லொரிகள், இரண்டு கப் ரக வாகனங்கள், ஒரு லொரி மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த மோசடி தொடர்பாக இதுவரை ஐந்து சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர், அதே நேரத்தில் 30 வாகனங்கள் சந்தேக நபர்களிடம் இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
கைதான சந்தேகபர்களில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளனர்.
இதேவேளை, எவருடைய முச்சக்கர வண்டியாவது திருடப்பட்டிருப்பின், உரிமையாளர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு இரத்தினபுரி பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.