கொரானாவின் இரண்டாம் அலை பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி வருவதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என நடிகை ஐஸ்வர்யா மேனன் கேட்டுக்கொண்டுள்ளார்.
‘ஆப்பிள் பெண்ணே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதன்பிறகு ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வீரா’, ‘தமிழ்படம் 2’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். பின்னர் ஹிப்பாப் ஆதி நடிப்பில் உருவான ‘நான் சிரித்தால்’ படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார்.
இதற்கிடையே நாடு முழுவதும் கொரானா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சென்றிருக்கிறது. மீண்டும் மூன்றாம் அலை உருவாக வாய்ப்பிருப்பதால் தடுப்பூசி போடும் பணியை வேகமாக செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. அந்த வகையில் பொதுமக்களும், பிரபலங்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் இன்று தனது முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நான் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டேன். இந்த தடுப்பூசியை போட எனக்கு குழப்பமாக இருந்தது. கொரானாவின் இரண்டாம் அலை பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி வருவதால் நீங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.