பசியால் வாடும் மக்களுக்கு உணவளித்த ‘குக் வித் கோமாளி’ நடிகை ; குவியும் பாராட்டு!

Date:

ஊரடங்கு நேரத்தில் பசியால் தவித்து வரும் மக்களுக்கு நடிகை தர்ஷா குப்தா உணவளித்து வருகிறார்.

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘முள்ளும் மலரும்” என்ற சீரியலின் மூலம் அறிமுகமான இவர், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார்.

அதன்பிறகு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார். இந்த நிகழ்ச்சியில் தர்ஷாவுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கொடுத்தனர் ரசிகர்கள். தற்போது மோகன் ஜி இயக்கும் ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இதற்கிடையே கொரானா பரவல் காரணமாக முழு ஊடரங்கு அமலில் உள்ளது. இதனால் சாலை ஓரங்களில் வாழும் மக்கள் பசியால் வாடி வருகின்றனர். இந்நிலையில் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடிகை தர்ஷா குப்தா, தன்னால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார். அதேபோன்று தானே நேரில் சென்று ஏழை மக்களுக்கு உணவும் கொடுத்து வருகிறார். தர்ஷாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட மூலத்தை எதிர்த்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில்  பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை தேசிய மக்கள் சக்தி...

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL)...

தமிழ் தேசம் ஜோதிலிங்கம் ஐயாவை இழந்துவிட்டது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல்

ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆய்வாளர் என்ற எல்லைகளைத் தாண்டித் தமிழ் தேசத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்