பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் சன் டிவியின் ஜோதி சீரியலில் நடித்து இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி உளள்து.
திரைப்படங்களில் காமெடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த பவர் ஸ்டார்ஸ்ரீனிவாசன். அவரை அவரே ஓவர் பில்டப் செய்யும் வகையில் தான் அவரது காமெடியும் இருக்கும். சந்தனத்துடன் அவர் சேர்ந்து நடித்த படங்களில் வரும் காமெடி காட்சிகளை தற்போது பார்த்தாலும் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.
சினிமா நடிகராக பயணம் ஒருபுறம் இருந்தாலும் அவர நிஜ வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சிறைக்கும் சென்றிருக்கிறார்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க தற்போது பவர் ஸ்டார் சீரியலிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். சன் டிவியில் இன்று முதல் ஒளிபரப்பாகும் ஜோதி என்ற புது தொடரில் தான் பவர் ஸ்டார் நடித்து இருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.
இந்த சீரியல் சன் டிவியில் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.