விஷால் மீது பாலியல் புகார் செய்யும் முன்னணி நடிகை!

Date:

பள்ளியில் மாணவிகளிற்கு நேர்ந்த பாலியல் தொல்லை பற்றி பேசுவதற்கு முன்னர், உங்களாலும் நண்பர்களாலும் நடிக்க வந்த இளம் பெண்களிற்கு நேர்ந்த கதியை நினைத்து பாருங்கள் என விஷாலுக்கு ஷாக் அடிக்க வைத்துள்ளார் காயத்ரி ரகுராம்.

சென்னையில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியில் பெண் குழந்தைகளுடன் ஆசிரியர் ஒருவர் தவறாக நடந்து கொண்ட செய்தி வெளியானதை தொடர்ந்து அதே போன்று சென்னையில் பல பள்ளிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் விஷயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனை பார்த்த பல பிரபலங்களும் சமூக வலைதளங்களில் கொந்தளித்துள்ளனர்.

நடிகர் விஷாலும் உணர்ச்சிபூர்வமாக அதனை கண்டித்தார். விஷால் கூறியதாவது, பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடம் ஒரு முறை கூட மன்னிப்பு கேட்காத பிஎஸ்பிபி பள்ளி இழுத்து மூடப்பட வேண்டும். மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

இதை கவனித்த நடிகையும் பாஜக கட்சியைச் சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் விஷால் குறித்து கடுமையான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், சினிமாவில் புதிதாக நடிக்க வரும் நடிகைகளில் நிலைமைகள் என்ன என்பதை முதலில் பாருங்கள். உங்களாலும் உங்கள் நண்பர்களாலும் பல பெண்கள் பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

உங்கள் திரைப்பட தொழில்துறை பெண்களுக்கு உங்கள் உதவி தேவைப்படும்போது நீங்கள் வீரத்தை காட்டியிருக்க வேண்டும், ஆனால் அதற்கு பதிலாக அது வேறு வழி. உங்கள் யதார்த்தத்தை முதலில் சரிபார்க்கவும். மேலும் உங்களுடைய அணுகுமுறையை காரணமாக பல நடிகைகள் உங்களுடன் நடிக்க மாட்டேன் என அடம் பிடிப்பது குறித்து முதலில் என்னவென்று பாருங்கள் அப்புறம் வந்து கருத்து பேசலாம் என குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சிறைகளில் மதத் தலைவர்களின் நிலைகண்டு வெம்பியிருக்கிறேன் – அநுர ஜனாதிபதிக்கு நினைவுபடுத்திய டக்ளஸ்

அனைத்து மதங்களின் தலைவர்களும் சிறைச்சாலைகளில் கௌரவமாக நடாத்தப்படுவதை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த...

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டமை சகோதரத்துவ நம்பிக்கையை வலுப்படுத்துகிறது – காரைதீவு தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு...

உக்ரைன் ஆயுதங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்திய Starlink? அமெரிக்கா மீது சந்தேகம்!

உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் Starlink இணையச் சேவையில் விதிக்கப்பட்ட வேகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்