முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை விடுதி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவை பணிப்பாளர் மு.உமாசங்கர், முல்லைத்தீவு மாவட்ட படைத்தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ச அகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டத்திற்காக பல்வேறு தரப்பினரின் நிதி பொருள் பங்களிப்பு ஊடாக இராணுவத்தினரின் மனிதவலுவினை பயன்படுத்தி சுமார் 10 இலட்சம் பெறுமதியில் கட்டி திறந்துவைக்கப்பட்டுள்ளது.





