முல்லைத்தீவில் முடக்கப்பட்ட பகுதி மக்களிற்கு நிவாரணம்

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தில் முடக்கப்பட்ட 11 கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள குடும்பங்களுக்கான நிவாரண பொதிகள் வழங்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட குடும்பங்களுக்கான அரசாங்கத்தின் நிவாரண பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (29) புதுக்குடியிருப்பு கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 17.05.21 அன்று தொடக்கம் 11 கிராம சேவையாளர் பிரிவுகள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 9 கிராமசேவையாளர் பிரிவினை சேர்ந்த 6,460 குடும்பங்களும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இரண்டு கிராமசேவையாளர் பிரிவினை சேர்ந்த 867 குடும்பங்களுக்குமான அரசாங்கத்தின் 5ஆயிரம் ரூபா நிவாரண பொதி வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிராம சேவகர் பிரிவுகளில் கிராம சேவகர் மற்றும் மக்கள் கட்டமைப்பின் ஊடாக இவை வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு கிழக்கு கிராமசேவையாளர் பிரிவில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் ஆகியோர் கலந்துகொண்டு மக்களுக்கான நிவாரண பொதிகளை வழங்கி வைத்துள்ளார்கள்.

பொது சுகாதாரவிதிமுறைகளை பயன்படுத்தி மக்கள் அதிகமாக கூடாதவாறு கிரமசேவகரால் கட்டுப்படுத்தப்பட்டு கட்டம் கட்டமாக வழங்கி வைக்கப்படுகின்றன.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் மனைவியின் சகோதரியை 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தானுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமி...

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை...

யாழ்ப்பாணத்தில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவை 190 மில்லியன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்