வெளிநாட்டு காதலி தொடர்பை துண்டித்தாராம்: பலாலி விகாரைக்குள் தற்கொலை செய்த 2 பிள்ளைகளின் அப்பா!

Date:

யாழ்ப்பாணம் பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் இராணுவச் சிப்பாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று பலாலி படைத்தளத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம் பெற்றுள்ளது.

தற்கொலை புரிந்த இராணுவச் சிப்பாய் வத்தேகமவை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரஞ்சுல பண்டார (36) என இராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

பலாலி படைத் தலைமையகத்திற்குள் உள்ள புத்த விகாரைக்குள் குறித்த இராணுவ சிப்பாய் தூக்கிலிட்டு தற்கொலை புரிந்துள்ளார்.

இந்த சிப்பாய்க்கு வெளிநாட்டு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அந்தப் பெண் தொடர்பினை துண்டித்ததால் விரக்தியடைந்து தற்கொலை புரிந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இறந்தவரின் உடல் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்...

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்