வடக்கு மாகாண தொற்றுநோயியல் மருத்துவமனையில் இடம்பெற்ற ஊழல்களை வெளிக்கொண்டுவந்த ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு

Date:

கிளிநொச்சியில் அமைந்துள்ள வடக்கு மாகாண தொற்றுநோயியல் மருத்துவமனையில்
இடம்பெற்ற ஊழல்களை கணக்காய்வு அறிக்கையினை அடிப்படையாக கொண்டு
வெளிப்படுத்திய கிளிநொச்சி ஊடகவியலாளர் மீது கிளிநொச்சி பொலீஸ்
நிலையத்தில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ந.சரவணபவனினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 23.05.2021 அன்று மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக இன்றைய
தினம் ஊடகவியலாளர் முருகையாக தமிழ்ச்செசல்வன் பொலீஸ் நிலையத்திற்கு
அழைக்கப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டது.

வடக்கு மாகாண தொற்று நோயியல் மருத்துவமனையில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்து
கணக்காய்வு திணைக்களம் விசாரணை செய்து அறிக்கை சமர்பித்திருந்தது. இந்த
அறிக்கையின் பிரதியை தனது செய்தி மூலம் ஒன்றுக்கு ஊடாக பெற்றுக்கொண்ட
ஊடகவியலாளர் அதனை அடிப்படையாக கொண்டு செய்தி அறிக்கையினை எழுதியிருந்தார்.

குறித்த செய்தி பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் வெளிவந்திருந்தது.
இதற்கு எதிராகவே பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் முறைப்பாடு
செய்யப்பட்டு ஊடகவியலாளாரிடம் வாக்கு மூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தவிர குறித்த ஊடகவியலாளர் இந்த ஊழல்கள் குறித்து தனது முகநூல்களில்
பதிவுகளை இட்டிருந்தார். அதற்கு எதிராகவும் முறைப்பாடு
செய்யப்பட்டிருந்தது.

ஊழலை ஆதாரத்துடன் வெளிப்படுத்திய ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு
செய்யப்பட்டமை ஒரு முதிர்ச்சியற்ற தன்மை எனவும், கடந்த காலங்களிலும்
ஊடகவியலாளர்களால் இவ்வாறு பல்வேறு ஊழல்கள் முறைகேடுகள் தொடர்பில்
செய்திகள் ஊடாக வெளிப்படுத்திய போது ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும்
வகையில் எவரும் நடந்துகொள்ளவில்லை என்றும் மாறாக ஊடகங்களில் வெளிவந்த
செய்திகளை அடிப்படையாக கொண்டு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள்
கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு எதிர்காலத்தில் உழல்கள்
முறைகேடுகள் இடம்பெறாது இருக்க வழிசமைக்க வேண்டும் மாறாக ஊழல்களை
வெளிப்படுத்துவர்களை அடக்க முற்படுவது அதிகாரிகளுக்குரிய செயற்பாடாக
இருக்காது என தெரிவித்துள்ள கிளிநொச்சி சமூக செயற்பாட்டாளர்கள்
கிளிநொச்சியில் இது முதல் முறையாக இடம்பெற்ற புதிய அனுபவம் என்றும்
தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது- தொழில் திணைக்களம் அறிவிப்பு

EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது-...

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்