திடீர் காய்ச்சலால் சிறுவன் உயிரிழப்பு!

Date:

திடீர் காய்ச்சல் காரணமாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 6 வயதுச் சிறுவன் சிகிச்சை பயனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உடுபிட்டி நாவலடியைச் சேர்ந்த பஜிதரன் சப்திகன் (6) என்ற உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் தரம் ஒன்றில் பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுவனுக்கு கடந்த மூன்று நாட்களாக காய்ச்சலுடன் கடும் உடல் சோர்வு காணப்பட்டுள்ளது. அதனால் அவர் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் உயிரிழப்புக்கு காய்ச்சல் காரணம் என மருத்துவக் குறிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்த திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், சிறுவனின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்க பணித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்