கொழும்பு துறைமுகம் அருகே தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல், கொழும்பு துறைமுகத்திற்கு வருவதற்கு முன்பு வேறு இரண்டு துறைமுகங்களுக்குள் நுழைய அனுமதி கோரப்பட்டாலும், இரண்டு துறைமுகங்களும் இந்த கப்பலுக்கு அனுமதியளிக்கவில்ரலயென கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டிம்
ஹார்ட்னோல் கூறியுள்ளார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் ஷிப்பிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அறிக்கையின்படி, கப்பலில் கொண்டு செல்லப்பட்ட இரசாயனம் கசிந்து தீ விபத்து ஏற்பட்டதுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரியும் கப்பலில் 1,486 கொள்கலன்களில் 25 தொன் நைட்ரிக் அமிலம் இருந்தது.
“இலங்கைக்கு 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரேபிய கடலில் கப்பலில் இருந்த கொள்கலன்களில் இருந்து ரசாயனம் கசிந்ததை குழுவினர் முதலில் பார்த்தார்கள்.
இது தெரிந்ததும், கப்பலின் கப்டன் இந்திய துறைமுகமான ஹசிர மற்றும் கட்டாரில் உள்ள ஹமாத் துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி கோரினார். அந்த கப்பலில் உள்ள கொள்கலன்களை இறக்குவதற்காகவே அவர் அனுமதி கோரினார். ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து, அதில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், ஏற்கனவே கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஒப்புக் கொண்டார்.
இரசாயனங்கள் முறையாக பொதி செய்யப்படாமையே விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.
“இந்தியா மற்றும் கத்தார் ஆகிய இரு துறைமுகங்கள் எங்களுக்கு வாய்ப்பளித்திருந்தால், இந்த அனர்த்தம் நடந்திருக்காது” என்று அவர் மேலும் கூறினார்.
கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 மைல் தொலைவில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீ கட்டுப்படுத்த முடியாத நிலையிலுள்ளதால், அடுத்த சில மணி நேரத்தில் அது மூழ்கக்கூடும் என்றுஎச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் 3 மாதங்களின் முன்னரே கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.