கொத்மலை, ரம்பொடையில் அமைந்துள்ள தொண்டமான் கலாச்சார மண்டபத்தில் இடைநிலை கொரோனா சிகிச்சை பிரிவு

Date:

அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கமைய கொத்மலை ரம்பொடையில் அமைந்துள்ள தொண்டமான் கலாச்சார மண்டபத்தில் இடைநிலை கொரோனா சிகிச்சை பிரிவு ஒன்றினை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரஜா சக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளரும், மலையகத்திற்கு பொறுப்பான கொவிட் பாதுகாப்பு செயலணியின் பிரதானியுமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

இந்த நிலையத்திற்கு தேவையான சமையலறை, பாதை, கட்டில்கள், வாகன தரிப்பிடங்கள் உள்ளிட்ட அத்தியவசிய பணிகள் இதன் போது விருத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இராணுவத்தினர் தற்போது 275 படுக்கைகள் கொண்ட வசதி மையத்தை நிர்மாணித்துள்ளனர்.

அத்தோடு, வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள், இராணுவ வீரர்கள் ஆகியோர் தங்குவதற்கான அனைத்து வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலைமையை பார்வையிடுவதற்காக தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், மலையகத்திற்கு பொறுப்பான கொவிட் பாதுகாப்பு செயலணியின் பிரதானி பாரத் அருள்சாமி ஆகியோர் சென்று பார்வையிட்டதோடு, நிலைமையையும் ஆராய்ந்துக் கொண்டனர். இதன்போது, இராணுவ அதிகாரிகளும் உடனிருந்தனர்.

மேலும், எதிர்வரும் 29ம் திகதி இந்த மையம் சுகாதார பிரிவினருக்கு கையளிக்கப்படும் என பாரத் அருள்சாமி மேலும் தெரிவித்தார்.

க.கிஷாந்தன்

spot_imgspot_img

More like this
Related

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

ரத்தனபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன், உள்ளே...

ஹோர்முஸைத் திறக்கும் திட்டம் குறித்து அமெரிக்காவின் பதில் செவ்வாய்க்கிழமை வரும் – ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்த தெஹ்ரானின் முன்மொழிவுக்கு, அமெரிக்காவிடமிருந்து செவ்வாய்க்கிழமையன்று அதிகாரப்பூர்வமான...

அரச வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு ரூ.66 இலட்சம் அபராதம்!

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்