பலத்த காற்று காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டள்ளது. மரங்கள் முறிந்து விழுந்து, மின் தடை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும், சுமார் 76,000 வீடுகளிற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை, கேகாலை, இரத்தினபுரி, பலாங்கொட, ஹொரன, இங்கிரிய, குருநாகல் மற்றும் குளியாபிட்டி ஆகிய இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 5 கிராமங்களிற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது.




