செப்டம்பரில் மீண்டும் ஐபிஎல்!

Date:

கொரோனா வைரஸ் தொற்றால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 18 அல்லது 19-ம் தேதியில் தொடங்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. எஞ்சியுள்ள 31 ஆட்டங்களை நடத்த 3 வார காலம் போதுமானதாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வரும் 2ம் தேதி இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறது. அங்கு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி யுடனும் அதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி கலந்து கொள்கிறது.

இதில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் செப்டம்பர் 14ல் மான்செஸ்டர் நகரில் முடி வடைகிறது. இதன் பின்னர் அடுத்த நாளே ஒட்டுமொத்த இந்திய அணியும் தனி விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பாதுகாக்க மீனவ அமைப்புகள் கூட்டிணைவு தீர்மானம்

பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பாதுகாப்பது தொடர்பில் மீனவ அமைப்புகள் கூட்டிணைந்து தீர்மானம்...

மாவீரர் தினம் – தியாக தீபம் திலீபன் சிலை விவகாரம் – யாழ் மாநகர சபையில் கடும் அமளி –

மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள் மற்றும் தியாக தீபம் திலீபனின் சிலை...

2026/2027 ஆண்டிற்கான அளவீட்டு உபகரணங்களை முத்திரையிடும் நடவடிக்கை

1995 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அளவீட்டு அலகுகளும், நியமங்களும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்