நாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணப் பொலிசார் மற்றும் இலங்கை விமானப் படையினரும் இணைந்து ட்ரோன் கமராவில் உதவியுடன் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
யாழ்ப்பாண நகரம் நல்லூர் ஆலயம் மற்றும் யாழ் நகரப் பகுதிகளில் விமானப்படையின் ட்ரோன் கமராக்களில் உதவியுடன் பொது மக்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு அத்தியாவசிய சேவை தவிர்ந்து பயணி்பவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விமானப்படையின் ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு நடமாடுபவர்கள், பொலீஸ் மோட்டார் சைக்கிள் படையணியினரால் கைது செய்யப்படவுள்ளதாக யாழ்ப்பாணபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1