மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கடும் காற்றுடன் கூடிய கடல் கொந்தளிப்பின் காரணமாக மீனவர்களின் வாடிகள் தூக்கி வீசப்பட்டதுடன் படகுகள் மற்றும் மீன் பிடி வலைகளும் சேதமாகியுள்ளது.
செளத்பார், தாழ்வுபாடு, ஓலைத்தொடுவாய், வங்காலை அச்சங்குளம், அரிப்பு உள்ளிட்ட பல மீனவ கிராம கடற் பகுதிகளில் தொடர்ந்து அதிவேக காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காணப்படுவதால் கடல் நீர் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள்ளும் புகுந்துள்ளது.
அதே நேரம் மன்னார் செளத்பார் பகுதியில் உள்ள கடற்படை முகாமும் சேதமடைந்துள்ளது.
பலத்த காற்று வீசுவதால் பாதிப்பு அதிகம் ஏற்படும் நிலை காணப்படுகின்றது.
கொரோனா காரணமாக வாழ்வாதரத்தை இழந்துள்ள நிலையில் தொடரும் சீரற்ற கால நிலை காரணமாக மேலும் பதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் அரசாங்கம் மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு தங்களின் வாழ்வாதாரத்திற்கும் சேதாமன வாடிகள் மற்றும் படகுகளை புனர்நிர்மானம் செய்வதற்கான உதவிகளை மேற்கொண்டுதறுமாறும் பாதிக்கப்பட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




