இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2,22,315 ஆக குறைந்தது

Date:

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,22,315 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 3,02,544 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

கொரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது.இந்நிலையில் கடந்த 24 மணி கொரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,67,52,447

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 2,22,315

இதுவரை குணமடைந்தோர்: 2,37,28,011

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 3,02,544

கொரோனா உயிரிழப்புகள்: 3,03,720

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 4,454

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 27,20,716.

இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 19,60,51,962இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை 33,05,36,064 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 19,28,127 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனை காப்பாற்றிய சட்ட நுணுக்கங்கள்!

சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு...

இலங்கையில் ஆறரை வருடத்தில் 5வது முறையாக நாடளாவிய மின்வெட்டு

இலங்கையில் நேற்று, 2020 பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாடு...

தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்