இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கருப்பு பூஞ்சை தொற்று பரவுவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது வெள்ளையை தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை பரவி வருகிறது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் பல்வேறு மாநிலங்கள் பாதிப்படைந்துள்ளன. இதை சமாளிக்க முடியாமல் மத்திய மாநில அரசுகள் திண்டாடி வருகிறது.
இந்த நிலையில் கருப்பு பூஞ்டிசை என்னும் நோய் முற்காலத்தில் இருந்தாலும் தற்போது மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். குறிப்பாக பழங்கள், காய்கறிகளில் தொற்றும் ஒரு சில பூஞ்சைகளால் இந்த நோய் உருவாகிறது.
‘மியூகோர்மைகோசிஸ்’ என்று அழைக்கப்படுகிற கறுப்பு பூஞ்சை நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகிறது. இதனால் முகம், கண் வலி, வீக்கம்இ, மூக்கடைப்பு, கண் மங்குதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
இது குணப்படுத்தப்படும் நோய் என்றாலும் நுரையீரல் பாதிக்கப்பட்ட கொரோனா நோயளிகளை, சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பூஞ்சை தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கருப்பு பூஞ்சை நோயை விட பீகாரில் வெள்ளை பூஞ்சை பாட்னாவில் பரவியது. மருத்துவர்கள் உட்பட 4 பேருக்கு வெள்ளை பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அதை விட மிக அதிக பாதிப்பை தரக்கூடிய மஞ்சள் பூஞ்சை இந்தியாவில் கண்டிறியப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் ஒரு நபருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சோம்பல், குறைந்த பசி அல்லது பசியின்மை மற்றும் எடை இழப்பு ஆகியவை மஞ்சள் பூஞ்சை நோயின் அறிகுறியாக கூறுகின்றனர்.
சில பேருக்கு காயங்கள் மெதுவாக குணமாதல், காயங்களில் மஞ்சள் பூஞ்சை சீழ் கசிவு, உறுப்பு செயலிழப்பு மற்றும் கண்பார்வை மங்குதலும் இதன் அறிகுறியாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சுத்தம் சுகாதாரம் இல்லாததால் இந்த நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வீட்டை ஈரப்பதம் இல்லாத வகையில் வைத்திருக்க வேண்டும், வீட்டில் பழைய உணவுகளை அகற்ற வேண்டும்,கழிவறை சுத்தமாக வைக்க வேண்டும். பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் வளர்வதற்கு இடம் கொடுக்காத வகையில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.