ஊரடங்கு எதிரொலியால் பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடி! (VIDEO)

Date:

ஊரடங்கு காரணமாக மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்து பல்வேறு திருமணங்கள் அவசரவசரமாக இன்றையே தினமே நடத்தப்பட்டது. ஆங்காங்கே மண்டபங்களில் குறைந்த அளவு ஆட்கள் அனுமதியுடன் திருமணங்கள் நடந்து முடிந்தன.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த மீனாட்சி ராகேஷ் – தீக்‌ஷனா தம்பதியினர் பறக்கும் விமானத்தில் பயணித்தபடி திருமணம் செய்துள்ளனர். சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த விமானத்தில் வருகை தந்த ஜோடி தங்களது உறவினர்கள் முன்பாக சம்ப்ராதயபடி மணமகன் மணமகளுக்கு தாலி கட்டி திருமணம் முடித்தார்.

இதையடுத்து இருவரும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஆசிபெற்றுகொண்டனர். விமான பயணம் என்பதால் அனைவருக்குமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையை சேர்ந்த ஜோடி பறக்கும் விமானத்தில் பயணத்தின்போது திருமணம் செய்துகொண்ட வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகிவருகிறது.

spot_imgspot_img

More like this
Related

மஹிந்தவின் சகாவிற்கு வரும் விசித்திர நோய்: நீதிமன்றில் நடந்த சுவாரஸ்யம்!

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லகமவின் பிணை மனுவை நேற்று (13) நிராகரித்த...

அம்மாவும் அப்பாவும் படுக்கையில்: பிணை கோரும் நாமல்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பில் ரூ. 100 மில்லியன் இலஞ்சம்...

மஹிந்த மகன் வழக்கில் நேற்று நீதிமன்றில் நடந்தவை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்