29.8 C
Jaffna
March 29, 2024
கிழக்கு

கரடியனாறில் தற்காலிக கொரோனா சிகிச்சை நிலைய ஏற்பாடுகள் முடியும் தறுவாயில்

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி கரடியனாறு வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோருக்கான தற்காலிக கொரோனா சிகிச்சை நிலைய ஏற்பாடுகள் இடம்பெற்றும் வரும் நிலையில் தற்போது வேலைகள் முடியும் தறுவாயில் உள்ளது.

கடந்த 15ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் இன்றும் நேரில் சென்று பார்வையிட்டார் இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரன் பார்வையிட்டார்.

நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்று நிலைமையின் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற் கட்டமாக ஏறாவூர் பற்று, கரடியனாறு பிரதேசத்தில் தற்காலிக வைத்திய விடுதிகள் மற்றும் அறுபது கட்டில்கள் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலை பணிகள் இடம்பெற்றுவருகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ
அவர்களின் சிந்தனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக இவ் வேலைத்திட்டம் இடம்பெற்றுவருகின்றது.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் மேற்பார்வையில் இடம்பெறும் வேலைத்திட்டத்தை இன்றும் சென்று இராஜாங்க அமைச்சர் பார்வையிட்டார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை அநீதிக்கு எதிராக 5வது நாளாக போராட்டம்!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

Leave a Comment