25.5 C
Jaffna
January 20, 2025
Pagetamil
இந்தியா உலகம்

ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தர்கள் வரிசையில் அதானி இரண்டாம் இடம்!

டில்லி அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தர்கள் வரிசையில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

உலக அளவில் மிகப் பெரிய செல்வந்தர்கள் வரிசையை பூம்பெர்க் வெளியிட்டுள்ளது.  இதில் உலக அளவில் 13 ஆம் இடத்தில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளார்.  இவருக்கு அடுத்தபடியாக அதானி குழுமத் தலைவர் கவுதம் அம்பானி 14 ஆம் இடத்தில் உள்ளார்.  ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தர் வரிசையில் அம்பானி முதல் இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார்.

சீனாவைச் சேர்ந்த ஸாங் ஷான்ஷான் முதலில் ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தராக விளங்கி வந்தார்.  கடந்த பிப்ரவரி மாதம் அவரை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி முகேஷ் அம்பானி முதல் இடத்துக்கு முன்னேறினார்.  தொடர்ந்து அவர் முதல் இடத்திலும் ஷான்ஷான் இரண்டாம் இடத்திலும் இருந்தனர்.

இதில் அம்பானியின் சொத்து மதிப்பு 76.5 பில்லியன் டாலர்கள் ஆகும்.  ஷான்ஷான் சொத்து மதிப்பு 63.6 பில்லியன் டாலராக இருந்தது.க்  தற்போது வெளியான பட்டியலின்படி உலக அளவில் 14 ஆம் இடத்தில் உள்ள செல்வந்தராக அதானி விளங்குகிறார்.  இவருடைய சொத்து மதிப்பு தற்போது 66.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இதன் அடிப்படையில் ஷான்ஷானை இரண்டாம் இடத்தில் இருந்து பின்னுக்குத் தள்ளி அதானி தற்போது ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளார்.  முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆன்மீக சங்கம நிகழ்வில் பாரிய தீ விபத்து

east tamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

2025ம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருது விழா ரத்தாகுமா?

east tamil

மணமகனுக்கு வயது 64; மணமகளுக்கு 68 – முதியோர் காப்பகத்தில் காதல் திருமணம்

Pagetamil

தி.மு.கவில் இணைந்தார் சத்யராஜ் மகள்!

Pagetamil

Leave a Comment