புச்சிபாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் தியேட்டர்களில் வெளியான உப்பேனா தெலுங்கு படம் மூலம் பிரபலமானவர் க்ரித்தி ஷெட்டி. அந்த படத்தில் க்ரித்தியின் அப்பா கம் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் விஜய் சேதுபதி.
உப்பேனா சூப்பர் டூப்பர் ஹிட்டான பிறகு க்ரித்தி ஷெட்டியை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிகின்றது. இந்நிலையில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படம் மூலமாக க்ரித்தி ஷெட்டி தமிழ் திரையுலகில் அறிமுகமாகவிருக்கிறார் என்று தகவல் வெளியானது.
17 வயதே ஆகும் க்ரித்தி கோலிவுட் வரும் செய்தி அறிந்த ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். மேலும் கோலிவுட் வந்த பிறகு வெயிட்டை குறைத்து எலும்பும் தோலுமாக ஆகிவிட வேண்டாம் என்றெல்லாம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் புதுப்படங்கள் குறித்து க்ரித்தி ஷெட்டி விளக்கம் அளித்திருக்கிறார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
என் அடுத்த படங்கள் குறித்து நிறைய வதந்திகள் கேள்விப்படுகிறேன். தற்போதைக்கு நான் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். நானிகாருவுடன் ஒரு படம், சுதீர் பாபு காரு, ராம் காருவுடன் தலா ஒரு படம். நான் ஒப்புக் கொண்ட படங்களை முடிப்பதில் தான் என் கவனம் எல்லாம் இருக்கிறது. நான் புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டால் நிச்சம் உங்களிடம் தெரிவிக்கிறேன்.
தயவு செய்து பத்திரமாக இருங்கள். குடும்பத்தாரை கவனித்துக் கொள்ளுங்கள். தைரியமாக இருக்கவும் என தெரிவித்துள்ளார்.
ராம் போத்தினேனியை வைத்து லிங்குசாமி இயக்கும் படத்தில் க்ரித்தி ஷெட்டி தான் ஹீரோயின். வித்தியாசமான கதை கொண்ட படங்களில் நடிப்பதற்கு பெயர் போனவர் நானி. அதனால் நானி, க்ரித்தி சேர்ந்து நடிக்கும் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.