‘ஆமி என்ன சொல்கின்றார்களோ… அதுதான் இங்கு’: முல்லைத்தீவு பொலிசார் கைவிரித்தனர்!

Date:

முல்லைத்தீவு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்து உதவிப்பணிப்பாளரின் அறிவித்தலுக்கு அமைய முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றினை செய்தி அறிக்கையிட முள்ளியவளை பகுதியில் இருந்து சென்ற ஊடகவியலாளர் சில படையிரின் வீதி சோதனை நிலையங்களில் தன்னை அடையாளப்படுத்தி சென்ற போதும் மூன்றாம் கட்டை பகுதியில் உள்ள படையினரின் வீதி சோதனை நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

தான் ஊடகவியலாளர் மாவட்ட செயலகத்தின் அறிவித்தலுக்கு அமைய செய்தி சேகரிக் செல்வதாக படையினருக்கு தெரிவித்த போதும் படையினர் ஊடகவியலாளர் முல்லைத்தீவு நோக்கி செல்வதற்கான அனுமதியினை மறுத்துள்ளதுடன் அதிகாரியிடம் கேட்டுவிட்டு சொல்வதாக கூறினார்கள்.

குறித்த வீதி சோதனை நிலையத்தில் முள்ளியவளை பொலிசாரும் கடமையில் நின்றுள்ளார்கள் அவர்களிடம் ஊடகவியலாளர் அடையாளப்படுத்தியபோதும் படையினர்கள் என்ன சொல்கின்றார்களோ அதுதான் இங்கு என்று பொலிசார் தெரிவித்துள்ளர்கள்.

குறித்தவீதி ஊடாக அத்திய அவசிய சேவையில் ஈடுபடும் ஏனையவர்கள் தங்களை அடையாளப்படுத்தி சென்று வந்துள்ள நிலையில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

சற்று நேரம் கழித்து அதிகாரியுடன் பேசிய அங்கு கடமையில் நின்ற படையினன் ஊடகவியலாளர் செல்வதற்கு அனுமதி இல்லை என்றும் இதனை பொலிசார் ஊடகவியலாளருக்கு சொல்லுமாறும் அறிவித்துள்ளார்கள்.

கடமையில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர் இதனை தெரிவித்துள்ளார்.

இன்னிலையில் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்து உதவிப்பணிப்பாளருக்கு நிலமையினை எடுத்துரைத்த ஊடாவியலாளர் அவர் இராணுவ அதிகாரிக்கு தெரியப்படுத்துவதாக கூறியுள்ளதை தொடர்ந்து 01 மணி நேரமாக காத்திருந்த ஊடகவியலாளர் பணி செய்யமுடியாத நிலையில் வீடு திரும்பியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையினை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் இணைந்து பிராந்திய சுகாதர சேவைகள் பணிமனையினருக்கு கொரோன நோயாளர்களுக்கான ஒருதொகுதி சுகாதார உபகரணங்கள் வழங்கிவைக்கப்படவுள்ள நிகழ்விற்கு சென்ற ஊடகவியலாளருக்கே இந்த நிலை ஏற்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊடகவியலாளர்கள் தங்களை அடையாளப்படுத்தி செய்தி சேகரிக்க சென்றாலும் சில பகுதிகளில் அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் மனைவியின் சகோதரியை 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தானுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமி...

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை...

யாழ்ப்பாணத்தில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவை 190 மில்லியன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்