கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர் மீது காவலாளி கொலைவெறி தாக்குதல்: இ.த.ஆ.சங்கம் கண்டனம்!

Date:

கிளிநொச்சியில் வலயக்கல்வி பணிப்பாளர் மீது ஓய்வுபெற்ற காவலாளியொருவர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். கடுமையாக பாதிக்கப்பட்ட வலயக்கல்வி பணிப்பாளர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (19) இந்த சம்பவம் நடந்தது.

விடுதியிலிருந்து அலவலகத்தை நோக்கி வலயக் கல்விப் பணிப்பாளர் நடந்து வந்து கொண்டிருந்த போது, அவரை அணுகிய ஓய்வுபெற்ற காவலாளி, தனது ஆவணங்கள் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.

நிர்வாக அலுவலரிடம் அது பற்றி பேசுமாறு வலயக்கல்வி பணிப்பாளர் கூறி முடிப்பதற்குள், அவர் மீது பாய்ந்த தாக்குதல் நடத்தியுள்ளார். வலியக்கல்வி பணிப்பாளரை நிலத்தில் விழுத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

இது குறித்து, இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் கண்டம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தற்போதுள்ள நெருக்கடியான உயிராபத்து உள்ள காலகட்டத்தில் பணியில் தம்மை அர்ப்பணித்துள்ள பணியாளர்கள்மீது தாக்குதல் நடத்தப்படுகின்றமை மோசமான செயலாகும். அதிலும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தற்போது ஆற்றுகின்ற பணி மிகவும் உன்னதமானது. இதனை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஏதாவது தவறுகள் இருப்பின் அது தொடர்பில் முறைப்படி நாம் அணுகி அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

பாடசாலைக் காவலாளி ஒருவர் வலயக் கல்வி அலுவலகம் சென்று பணிப்பாளரைத் தாக்குவதென்பது சாதாரண விடயம் அல்ல. இதே காவலாளி தான் பணியாற்றிய இடங்களில் பல தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதும். இவரது மனைவி ஒரு அதிபர் என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இத்தகைய தாக்குதலாளியின் பின்னணி என்ன? இவர் ஏன் வலயக்கல்விப் பணிப்பாளரைத் தாக்கினார். இதன் பின்னணியில் வேறு நபர்கள் உள்ளனரா என்பது பற்றி தீர விசாரிக்க வேண்டும்.

கிளிநொச்சி கல்வி வலயம் பல்வேறு துயர்களைத்தாண்டி கல்வி நிலையில் மீள ஆரம்பித்துள்ளது. அதற்கு அங்கு கடமைபுரியும் ஆசிரியர்கள், அதிபர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் அனைவருமே பங்காளர்கள். இதனை அங்கு வாழுகின்ற அனைவரும் புரிந்துகொள்வதோடு அதற்கு ஒத்தாசையாக இருக்கவேண்டும்.

2020 நடைபெற்ற உயர்தர பரீட்சை முடிவுகளின்படி வடக்கு மாகாணம் ஆறாவது இடத்தில் கணிக்கப்பட்டாலும் உண்மையில் வடக்கு மாகாணம் முதல் நிலையில் உள்ளது. தொழிநுட்ப பிரிவுகளில் வடக்கு மாகாண மாணவர்கள் தோற்றிய வீதம் குறைவடைந்துள்ளமையும், முதல்நிலையில் உள்ள ஏனைய ஐந்து மாகாணங்களில் தொழிநுட்ப பிரிவுகளில் அதிகளவான மாணவர்கள் தோற்றியமையும் வடக்கு மாகாணம் ஆறாம் நிலை காட்டுவதற்கு காரணமாகின்றது. அத்தகைய தொழிநுட்ப பாட பெறுபேறுகளை விலக்கி கணிப்பீட்டைப் பார்க்கின்றபோது வடக்கு மாகாணம் முதலிடத்தில் இருப்பது தெரியவரும். எதிர்காலத்தில் அதற்கான முயற்சிகளும் எடுக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்