கண்பார்வைக் கோளாறுகள்:-
கண்ணுடைய நாயகி, சிவபிரான், சுப்பிரமணியர், விநாயகர் போன்ற தெய்வங்களை வணங்க வேண்டும்.
முடி நரைத்தல், உதிர்தல்:-
மகாலஷ்மியையும், வள்ளியையும் வணங்க வேண்டும்.
காது மூக்கு, தொண்டை வியாதிகள் தீர:-
முருகப் பெருமானை வணங்க வேண்டும்.
ஆஸ்துமா, சளி, சுவாசக் கோளாறுகள்,சைனஸ் நிமோனியா தீர:-
மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.
இருதயம், மாரடைப்பு நீங்க:-
சக்தி, கருமாரி, துர்க்கை அம்மன்களை வணங்க வேண்டும்.
அஜீர்ணம்,குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சல் காமாலை, காலரா, பேதி போன்ற நோய்களுக்கு:-
தட்சிணாமூர்த்தி, முருகன் போன்ற தெய்வங்களை கும்பிட வேண்டும்.
நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு :-
பழனி முருகனைக் கும்பிட வேண்டும்.
மூட்டுவலி, யானைக்கால் வியாதி, கால் ஆணி தீர :–
சக்கரத்தாழ்வார் சுவாமியைக் கும்பிட வேண்டும்.
வாதம்,கீல்வாதம், பக்கவாதம், திமிர்வாதம், இளம்பிள்ளை வாதம் தீர :-
சனிபகவான், சிவபெருமான் ஆகிய தெய்வங்களை வணங்க வேண்டும்.
பித்தம் தீர :-
ஸ்ரீ முருகப் பெருமானை வழிபட வேண்டும்
வாயுக்கோளாறுகள்:-
ஆஞ்சநேய சுவாமியை வழிபட வேண்டும்.
எலும்பு வியாதிகள்:-
சிவபெருமான், முருகன் ஆகியோரை வழிபட வேண்டும்.
ரத்தசோகை, ரத்த அழுத்தம் :-
முருகப்பெருமான், செவ்வாய் பகவான் ஆகியோரை வழிபட வேண்டும்.
நீர் வியாதிகள்:-
சந்திர தரிசனம், விசாலாட்சி அம்மாள் ஆகியோரை வழிபட வேண்டும்.
குஷ்டம், சொறி, சிரங்கு :-
சூரியன், சங்கரன்கோவில், சங்கரநாராயணன், வைதீஸ்வரன் ஆகியோரை வழிபட வேண்டும்.
அம்மை நோய்கள்:-
முத்துமாரியம்மன், முத்தாலம்மன், கருமாரி ஆகியோரை வழிபட வேண்டும்.
ஜன்னி, தலைவலி,ஜீரம்:-
சங்கடஹரசதுர்த்தி, பிள்ளையார், முருகன் ஆகியோரை வழிபட வேண்டும்.
புற்று நோய் :-
சிவ பெருமானை வழிபட வேண்டும்.
விஷக் கடி :-
சங்கரன் கோவில் கோமதி அம்பாளை வழிபட வேண்டும்.