இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொருளாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன், கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். டிக்கோயா அடிப்படை மருத்துவமனையில் இன்று (19) நடத்தப்பட்ட விரைவான ஆன்டிஜென் பரிசோதனையின் போது தொற்று கண்டறியப்பட்டதாக டிக்கோயா அடிப்படை மருத்துவமனையின் மருத்துவர் தெரிவித்தார்.
கோவிட் 19 அறிகுறிகளுடன் மாருதபாண்டி ராமேஸ்வரன் இன்று டிக்கோயா அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவான ஆன்டிஜென் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.
கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்காக மருதபாண்டி ரமேஷ்வரன் , டிக்கோயா வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
எம்.பி.யுடன் நேரடி தொடர்பிலிருந்தவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு தலவாக்கலை, மடகும்புர பகுதியின் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக டிக்கோயா அடிப்படை மருத்துவமனையின் மருத்துவர் மேலும் தெரிவித்தார்.