மட்டக்களப்பு, கிரானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டித்த 10 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கிரான் கடற்கரையில் தனது காணிக்குள் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த விமலசேன லவக்குமார் மற்றும் அவரின் தந்தை உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுட்டிக்கப்பட்டு வருகிறது.
மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த தடைவிதித்து நீதிமன்றம் வழங்கிய கட்டளையில், விமலசேன லவக்குமாரின் பெயரும் இணைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை நினைவேந்தலை அனுட்டித்த லவக்குமார், தன்னால் கையாளப்படும் முகப்புத்கத்தில் நினைவஞ்சலி படங்களை பதிவிட்டார்.
இதையடுத்து அவர் கல்குடா பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அந்த புகைப்படங்களின் அடிப்படையில் நினைவஞ்சலியில் ஈடுபட்ட மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் பெண்கள்.
அனைவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.