19 இலங்கை பயணிகள் உட்பட 35 நபர்களுடன் ஏர் இந்தியா விமானம் இன்று காலை டெல்லியில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
புதிய வைரஸ் மாறுபாடு பரவுவதால் இந்தியாவில் இருந்து வருபவர்களிற்கு இலங்கை தற்காலிக தடைவிதித்துள்ள நிலையில், இந்த குழுவினர் நாட்டிற்கு வருவதற்கு இலங்கை வெளியுறவு அமைச்சிடம் சிறப்பு ஒப்புதல் பெறப்பட்டது.
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் 16 அதிகாரிகளுடன் விமானம் அதிகாலை 12:30 மணியளவில் தரையிறங்கியது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1