பிரதேச சபையின் புதிய தலைவர் தெரிவு: மாந்தை மேற்கு பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவர் கடத்தல்?

Date:

மாந்தை மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு இடம் பெற இருந்த நிலையில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் சக பெண் உறுப்பினர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மாந்தை மேற்கு பிரதேச சபையின் பெண் உறுப்பினர் என்.ரம்சியா குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த நிலையில் புதிய தலைவருக்கான தெரிவு வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் இன்று புதன் கிழமை (19) காலை 10.30 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இதன் போது சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சக உறுப்பினரான விளாத்திக் குளத்தைச் சேர்ந்த நெசவு நாதன் தவமலர் என்பவரை மாந்தை மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் தௌபீக் என்பவர் கடத்தியுள்ளார்.

குறித்த பெண் உறுப்பினரை தேடியும் அவரை கண்டு பிடிக்கவில்லை. அவருடைய தொலைபேசி இலக்கம் செயலிழந்துள்ளது.

தமது கட்சியின் உறுப்பினர் ஒருவரை தலைமறைவு செய்ய வைத்து குறித்த வெற்றியை பெற்றுள்ளனர்.இதனால் பெண் சமூகத்திற்கான ஒரு கௌரவத்தை நாங்கள் இழந்துள்ளோம்.

குறித்த பெண் உறுப்பினரை கடத்தி எங்கே வைத்திருக்கின்றார்கள்? என்று தெரியவில்லை. இவ்விடையம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய உள்ளேன். என அவர் தெரிவித்தார்.

மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் தெரிவுக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக இராமநாதன் வவுனியன் ஆதி அருணாசலம் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சி சார்பாக விக்கினராசா கயிலைநாதன் ஆகிய இருவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

24 உறுப்பினர்களைக் கொண்ட மாந்தை மேற்கு பிரதேச சபையில் தலைவர் தெரிவிற்கான வாக்களிப்பின் போது 2 உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. மேலும் ஒரு உறுப்பினர் நடு நிலை வகித்தார்.

ஏனைய 19 உறுப்பினர்களும் பகிரங்க வாக்களிப்பை மேற்கொண்டனர்.

இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட இராமநாதன் வவுனியன் ஆதி அருணாசலம் 12 வாக்குகளையும், தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சி சார்பாக போட்டியிட்ட விக்கினராசா கயிலைநாதன் 9 வாக்குகளையும் பெற்ற நிலையில் மேலதிக 3 வாக்குகளினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட இராமநாதன் வவுனியன் ஆதி அருணாசலம் வெற்றி பெற்று மாந்தை மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் அருகில் விழுந்த அமெரிக்க ஹெலிகொப்டரில் இருந்த விமானிகள் பாதுகாப்பாக உள்ளனர்

ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே விழுந்த அமெரிக்க இராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகொப்டரின் விமானிகள்...

இராணுவ வீரர் கடத்தல் விவகாரத்தில் ஒருவர் கைது!

கிரிந்திவெல, நரங்கஸ்பிட்டியவில் 2018 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர்...

பணமோசடி தடுப்பு சட்டத்தின் சில பிரிவுகளிற்கு சிறப்பு பெரும்பான்மை தேவை

சில பிரிவுகளுக்கு சிறப்புப் பெரும்பான்மை தேவைப்படுவதைத் தவிர, பணமோசடி தடுப்புத் திருத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்