கொரோனா நிவாரண பணிகளுக்காக சன் டிவி 10 கோடி ரூபாயை வழங்கி உள்ளது. தற்போது கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி தினம்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி வருகிறது. தமிழ்நாட்டிலும் பாதிப்பு அதிகம் இருக்கும் நிலையில், கொரோனா நிவாரண பணிகளுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
அதன் பின் சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் உட்பட பலரும் நன்கொடை அளித்து வருகின்றனர். இன்று நடிகர் ரஜினிகாந்த் முதல்வரை நேரில் சந்தித்து 50 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக வழங்கினார்.
இந்நிலையில் தற்போது சன் டிவி 10 கோடி ரூபாயை கொரோனா நிவாரணத்திற்காக வழங்கி உள்ளது. கலாநிதி மாறன் இன்று முதலமைச்சரை நேரில் சந்தித்து இதற்கான காசோலையை வழங்கினார்.
அதன் புகைப்படம் சன் டிவியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டு உள்ளது. “Today, Sun TV donated Rs.10 crores for Tamil Nadu’s Covid-19 relief work. Thiru Kalanithi Maran handed over the cheque to Honourable Tamil Nadu CM Thiru M.K. Stalin” என அந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளனர்.