28 C
Jaffna
December 5, 2023
சினிமா

கனா இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் மரணம்!

இயக்குநரும், நடிகரும், பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். இது குறித்து அறிந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

அட்லி இயக்கிய ராஜா ராணி படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். சிவகார்த்திகேயனின் மான் கராத்தே, பென்சில், ரெமோ, கார்த்திருப்போர் பட்டியல், க/பெ ரணசிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் அருண்ராஜா காமராஜ். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நடிப்பு, இயக்கம் தவிர்த்து அவர் பாடல்களும் எழுதி வருகிறார்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்திற்காக அருண்ராஜா காமராஜ் எழுதிய நெருப்புடா பாடல் சூப்பர் ஹிட்டானது. அவர் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து ஆர்ட்டிகிள் 15 இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார்.

இந்நிலையில் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி சில மணிநேரங்களுக்கு முன்பு காலமானார். அவருக்கு வயது 38.

சிந்துஜா இறந்த செய்தி அறிந்த திரையுலகினரும், ரசிகர்ளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிந்துவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது,

சிந்துஜா இறந்த செய்தி அறிந்து கவலையாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. இளம் வயதில் மனைவியை இழந்து நிற்கும் அருண்ராஜா அண்ணாவுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லையே. போகும் வயதா இது அண்ணி?. என்ன வாழ்க்கையா இது?

அருண் அண்ணாவின் நிலைமையை யோசித்து கூட பார்க்க முடியவில்லை. கடவுள் தான் அவருக்கு துணையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘அண்ணன் விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடி இதயங்களில் நானும் ஒருவன்’: நடிகர் சூர்யா

Pagetamil

5 மொழிகளில் சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதை

Pagetamil

‘திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்’: நடிகை ஷீலா அறிவிப்பு

Pagetamil

‘துருவ நட்சத்திரம்’ படத்துக்கு ரூ.60 கோடி கடன் பிரச்சினை: தயாரிப்பாளர் கே.ராஜன் தகவல்

Pagetamil

மன்னிப்பு கேட்டுவிட்டதால் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்: காவல் துறைக்கு நடிகை த்ரிஷா கடிதம்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!