26 C
Jaffna
December 17, 2024
Pagetamil
சினிமா

ப்ரியங்கா சோப்ராவின் தங்கையாக இருப்பதால் ஒரு பலனும் இல்லை ; மீரா சோப்ரா

பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் தங்கையாக இருப்பதால் ஒரு பலனும் இல்லை என்று நடிகை மீரா சோப்ரா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். தன்னை ப்ரியங்காவுடன் ஒப்பிடாமல் இருந்ததே ஆறுதல் என்று மேலும் கூறியுள்ளார்.

எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே படம் மூலம் நடிகையானவர் மீரா சோப்ரா. பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் தங்கை. ஜாம்பவான், லீ, மருதமலை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் தவிர்த்து இந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார் மீரா.

படங்கள் தவிர்த்து வெப் தொடரிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

நான் பாலிவுட்டுக்கு வந்தபோது ப்ரியங்காவின் தங்கையும் நடிக்க வருகிறார் என்று பரபரப்பாக பேசினார்கள். அவ்வளவு தான். ஆனால் அவருடன் யாரும் என்னை ஒப்பிட்டு பேசவில்லை. ப்ரியங்காவால் எனக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. நான் அவரின் தங்கை என்பதால் யாரும் எனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.

ப்ரியங்கா சோப்ராவுக்கு உறவினராக இருப்பதால் என் கெரியருக்கு ஒரு பலனும் இல்லை. ஆனால் மக்கள் யாரும் என்னை லேசாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் சினிமா குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்று தான் பார்க்கிறார்கள். அது ஒன்று தான் எனக்கு கிடைத்த நல்லது. மற்றபடி நான் கஷ்டப்பட வேண்டியிருந்தது.நல்ல வேளையாக என்னை ப்ரியங்காவுடனோ, மன்னாராவுடனோ யாரும் ஒப்பிடவில்லை என்றார்.

மீரா சோப்ராவின் சகோதரர்கள்(cousin) 2 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர். இது குறித்து மீரா கூறியதாவது,என் சகோதரர்கள் கொரோனாவால் இறக்கவில்லை. மாறாக மருத்துவ உள்கட்டமைப்பு சரியில்லாததால் இறந்துவிட்டனர். என் சகோதரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது பெங்களூரில் ஐசியுவில் இடம் கிடைக்காமல் இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டார். இரண்டாவது சகோதரருக்கு திடீர் என்று ஆக்சிஜன் அளவு குறைந்து இறந்துவிட்டார்.

அவர்களை காப்பாற்ற முடியவில்லையே என்பதை நினைக்கும்போது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. அடுத்து என்ன நடக்குமோ என்று பயத்தில் இருக்கிறேன். ஒவ்வொரு உயிராக சென்று கொண்டிருக்கிறது. நாம் என்ன தான் முயற்சி செய்தாலும் காப்பாற்ற முடியவில்லை என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

Leave a Comment