உலகம் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. தினமும் காலையில் எழுந்தால் நம்மை சிரிக்க வைத்த நம் குடும்ப சொந்தங்களும், திரை பிரபலங்களும், காமெடி நடிகர்களும், இறந்து கொண்டே இருக்கிற செய்திகள் தான் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
காமெடி நடிகர் விவேக், பாண்டு, ஜோக்கர் துளசி, தலைநகரம் மாறன், என நம்மை சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தி பார்த்தவர்களுக்கு, இன்று நம்மளால தெரிவிக்க முடிந்தது இரங்கல்களை மட்டும்தான். மாறனின் இழப்பில் இருந்து மீள முடியாமல் இருக்கும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது ரஜினி முருகன் படத்தில் பவுன்ராஜ் என்னும் காமெடி நடிகர் நடித்தார்.
அந்த படத்தில் வரும், ” இது என்னடா மதுரைகாரனுக்கு வந்த சோதனை” என்கிற வசனம் மூலம் இவர் பிரபலம் அடைந்தார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் தற்போது மாரடைப்பால் இறந்துவிட்டார் என ரஜினி முருகன் பட இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.