மலையாளத்தில் தற்போது நடந்து வரும் பிக் பாஸ் 3ன் குழுவினர் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடைபெற்று வருகிறது. தற்போது மலையாளத்தில் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
சென்னையில் உள்ள இவிபி ஸ்டூடியோவில் செட் அமைக்கப்பட்டு இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில பிக் பாஸ் குழுவில் இருக்கும் ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும் மோகன்லால் தொகுத்து வழங்கி வரும் இந்த ஷோவின் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வருகிறது. ஷோ நிறுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
பிப்ரவரி 14ம் தேதி ஒளிபரப்பை தொடங்கிய மலையாள பிக் பாஸ் 3 இந்த மாதம் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அது இன்னும் இரண்டு வாரங்கள் அதிகரிக்கப்பட்டு ஜூன் மாதம் தான் grand finale நடக்கும் எனவும் கூறப்படுகிறது. அதனால் மொத்தம் 114 நாட்கள் இந்த சீசன் நடப்பது குறிப்பிடத்தக்கது.