நினைவுத்தூபியை அழிக்கலாம்: தமிழர் நினைவை அழிக்க முடியாது!

Date:

கல்லாலும் மண்ணாலும் சிமேந்தாலும் அமைந்த நினைவுத்தூபியை அழிக்கலாம். ஆனால் கல்லுப்போல ஒவ்வொரு தமிழன் மனதிலும் ஆழ பதிந்த நினைவை, வரலாற்றை எமது இனம் இருக்கும் வரை அளிக்க முடியாது . இதனை இனவாத சிங்கள தேசம் புரிந்த கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார் வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒவ்வொரு ஆண்டும் மே 18 என்பது சிங்கள இனவெறி அரசாங்கத்தின் தமிழின இன அழிப்பின் உச்சம் தொட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளாகும் மனிதர்கள் கொல்லப்பட்டாலும் வரலாறு கொல்லப்பட முடியாதது என்பதை நினைவு கொள்ளும் நாளாகும்.

2010 ஆம் ஆண்டு முதல் இனவெறி அரசாங்கங்களின் தடைக்கள் இடையூறுகள் எல்லாவற்றையும் மீறியும் தாண்டியும் நாம் எல்லோரும் பல்வேறு வழிகளில் இந்நாளை நினைவு கூர்ந்தே வந்திருக்கிறோம் இதன் ஒரு அடையாளமாகவே முள்ளிவாய்க்கால் மண்ணில் எளிமையான நினைவுத்தூபி நிறுவப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வுகளை தடுத்து வந்த அரசாங்கம் இப்பொழுது அந்த நினைவு தூபியையும் இரவோடு இரவாக இடித்தழித்து விட்டு அப்படி ஒரு தேவை இராணுவத்துக்கு இல்லை என்கிறது.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை முழுமையாக ஆக்கிரமித்து நின்று கொண்டு நினைவுத்தூபி அழித்தது பற்றி தமக்கு தெரியாது என்கின்றனர். கல்லாலும் மண்ணாலும் சிமேந்தாலும் அமைந்த நினைவுத்தூபியை அழிக்கலாம். ஆனால் கல்லுப்போல ஒவ்வொரு தமிழன் மனதிலும் ஆழ பதிந்த நினைவை, வரலாற்றை எமது இனம் இருக்கும் வரை அளிக்க முடியாது . இதனை இனவாத சிங்கள தேசம் புரிந்த கொள்ள வேண்டும்
நிகழ்கால அரசாங்கம் பதவிக்கு வந்த சென்ற ஆண்டு முதல் கட்டவிழ்த்து விடப்பட்ட கடும்போக்குத் தனம் எம் இனத்தை தளர்வடைய செய்ய மாட்டாது என்பதை சென்ற ஆண்டிலும் நிரூபித்தோம் அதே போன்று இந்த வருடமும் எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு எமது இல்லங்கள் ஒவ்வொன்றிலும் பகிரங்கமாக தீபங்கள் ஏற்றி அநியாமாக கொல்லப்பட்ட எமது உறவுகள் அனைவரையும் நினைவு கூர்ந்து வணங்கி எமது தணியாத விடுதலை உணர்வை வெளிப்படுத்தி நிற்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பேத்தியை சீரழித்த தாத்தாவுக்கு 15 வருட சிறை

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய...

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு  சென்ற பெண் ஒருவர் நிறுத்தி...

“குடிபுகு சான்றிதழ் விவகாரத்தில் ஆளுநர் என்னை தவறாக வழிநடத்துகிறார்” – கிஷோர்

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்